பாஸ்போர்ட் தேதியை திருத்தி சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது
பாஸ்போர்ட் தேதியை திருத்தி சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதனிடையே விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெலுங்கன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் (வயது 33) என்பவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்ததில், ஏற்கனவே சிங்கப்பூரிலிருந்து வந்த தேதியை மாற்றி போலியான சீல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் அவரை பிடித்து விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.