பெண் ஊழியரிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது

தனியார் தொண்டு நிறுவனத்தில் புகுந்துபெண் ஊழியரிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-20 18:45 GMT

குளச்சல்:

தனியார் தொண்டு நிறுவனத்தில் புகுந்துபெண் ஊழியரிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது செய்யப்பட்டார்.

குளச்சல் பள்ளிமுக்கு சந்திப்பில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று திடீரென ஒரு மர்ம ஆசாமி புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் ஆபாச சைகையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஊழியர் கோபத்தில் கத்தியவாறே தனது செருப்பை கழற்றி அடிப்பதற்கு முயன்றுள்ளார். இதனால் பயந்து போன ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தொண்டு நிறுவன மேலாளர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மஆசாமியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த ஆசாமி குறும்பனையை சேர்ந்த ராஜா (வயது 38), மீன்பிடி தொழிலாளி என்பதும், திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொண்டு நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசாமி சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்