புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
காரைக்குடி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி தெற்கு போலீஸ்சரகம் அன்னை நகரை சேர்ந்தவர் நல்லையன் (வயது 36). இவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அன்னை நகரில் சோதனையில் ஈடுபட்ட பொலீசார் நல்லய்யன் பதுக்கி வைத்திருந்த 55 கிலோ எடையுள்ள புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.