கோவில் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது

மானூர் அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-28 20:24 GMT

மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் காணியாளர் கோவிலில் கடந்த 16-ந் தேதி சிலைகள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி கருப்பசாமி, நிர்வாகி காளிதாஸ் ஆகியோர் மானூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 32) என்பவர் கோவிலில் சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்