மாநகராட்சி ஊழியரின் மனைவியை தாக்கியவர் கைது
மாநகராட்சி ஊழியரின் மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மலைக்கோட்டை:
திருச்சியில் கரூர் பைபாஸ் ரோடு, மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 22). இவர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இதே மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த வனிதா என்பவரும் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் வனிதாவிடம், இளநிலை உதவியாளர் பிரபு தொடர்ந்து பேசுவதாக சந்தேகம் அடைந்த வனிதாவின் கணவர் மணிகண்டன், பிரபுவின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரபுவின் மனைவி நந்தினியை கீழே தள்ளி மணிகண்டன் தாக்கியுள்ளார். இது குறித்து நந்தினி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மணிகண்டன் மீது ஏற்கனவே மதுரையில் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.