வீடு புகுந்து மூதாட்டியிடம் 7¼ பவுன் சங்கிலி பறித்தவர் கைது

வீடு புகுந்து மூதாட்டியிடம் 7¼ பவுன் சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-07 19:13 GMT

திருச்சி உறையூர் சீனிவாச நகரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி காமாட்சி (வயது 76). இவர் மருத்துவக் கல்லூரியில் தட்டச்சராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் பகல் இவரது வீட்டில் ஏற்கனவே பெயிண்டராக வேலை பார்த்த தர்மு என்கிற பரமசிவம் வந்தார். அப்போது அவர் காமாட்சியிடம் வீட்டில் ஏதாவது வேலை இருக்கிறதா? என்று கேட்டுவிட்டு சிறிது நேரத்தில் காமாட்சி கழுத்தில் அணிந்து இருந்த 7¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து காமாட்சி உறையூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மு என்கிற பரமசிவத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்