ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-03 01:06 IST

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக அம்மாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் அம்மாப்பேட்டை அருகே பூண்டி தோப்பு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் ஞானம் நகரை சேர்ந்த மகேஷ் குமார் (வயது 42) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டு நம்பர் பதிவுகள் அடங்கிய 3 குறிப்பு நோட்டுகள், ஒரு செல்போன் மற்றும் ரூ.2,530 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் மகேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்