திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது29). இவர் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திருமக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.