கொட்டாம்பட்டி அருகே குவாரியில் ஆண் எலும்புக்கூடு- கொலையா? போலீசார் விசாரணை

கொட்டாம்பட்டி அருகே குவாரியில் ஆண் எலும்புக்கூடு கிடந்தது. இது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-10 21:33 GMT

கொட்டாம்பட்டி,


கொட்டாம்பட்டி அருகே குவாரியில் ஆண் எலும்புக்கூடு கிடந்தது. இது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலும்புக்கூடு

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள காடம்பட்டி விலக்கு அருகே செயல்படாத குவாரி பகுதியில் எரிந்த நிலையில் ஆண் எலும்புக்கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரேபோனி, கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

எரிந்த நிலையில் கிடந்த ஆண் எலும்புக்கூடு, 2 துண்டுகளாக கிடந்தது. இறந்தவருக்கு 60 வயது இருக்கலாம் என தெரியவந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர்.

விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை யாரேனும் கொலை செய்து எரித்து சென்றனரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்