ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம்
கண்டமங்கலம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலம் அருகே ஆழியூர் ரெயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், முகத்தில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில் முகம் மட்டும் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் கொலை செய்யப்பட்டு ரெயில்வே தண்டவாள பகுதியில் வீசிச்சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.