தண்டவாளத்தில் ஆண் பிணம்

தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2023-04-22 18:40 GMT

புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் ரெயில்வே கேட் பக்கம் நேற்று தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி ரெயில்வே போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சவுதாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு 30 முதல் 35 வயது வரை இருக்கும் என தெரிந்தது. மேலும் அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். இதில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். இதையடுத்து பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை எதுவும் செய்து கொண்டாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்