குழித்துறையில் தண்டவாளத்தில் ஆண் பிணம்

குழித்துறையில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-10-08 21:56 GMT

நாகர்கோவில் :

குழித்துறை மேற்கு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் நேற்று காலை சுமார் 45 வயதுடைய ஆண் பிணம் கிடந்தது. அதாவது தலை உள்ளிட்ட சில இடங்களில் சிதைந்து காணப்பட்டது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், ஜெயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என பல கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்