விக்கிரவாண்டி அருகேசாலையோரம் ஆண் பிணம்போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி அருகே சாலையோரம் ஆண் பிணமாக கிடந்தாா். இதுகுறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2023-07-31 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த நந்திவாடி பஸ்நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் 50 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று காலை பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்