அடையாளம் தெரியாத ஆண் பிணம்
ராசிபுரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
ராசிபுரம்
ராசிபுரத்தில் இருந்து காட்டூர் செல்லும் சாலையோர புதரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் 35 வயது உள்ள அந்த ஆணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றனார். பின்னர் இறந்து கிடந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அழுகிய நிலையில் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று ராசிபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.