மலேரியா விழிப்புணர்வு முகாம்

எமக்கலாபுரம் அரசு பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-06-20 16:50 GMT

சாணார்பட்டி அருகே எமக்கலாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மலேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஆக்னல் ஜோஸ்பின் தலைமை தாங்கினார். மாவட்ட பூச்சியியல் வல்லுனர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் மலேரியா நோய் குறித்து விளக்கவுரை ஆற்றினார். இதில், மாணவ-மாணவிகளுக்கு மலேரியா நோயின் அறிகுறிகள், தடுப்பு முறை, சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் மலேரியா தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் மலேரியா நோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் இளநிலை பூச்சியியல் வல்லுனர் விஜயா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், நல்லேந்திரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்