பல்லடம்
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் விநாயகர், மாகாளியம்மன், காமாட்சி அம்மன், முனியப்பசாமி, கோவில் உள்ளது. கோவிலின் 9-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தொழில் வளம் சிறக்கவும், மழை வேண்டி விநாயகர் பூஜை, சங்கல்பம், கலச பூஜை, யாகபூஜை, மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
இதில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், கோவில் தலைவர் ராமசாமி, வக்கீல் பொன்னுசாமி, தொழில் அதிபர்கள் ராமசாமி, சாமிநாதன், ராமமூர்த்தி, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.