மக்காச்சோளம் அறுவடை-சாகுபடி பணிகள் தீவிரம்

வடகாடு பகுதியில் மக்காச்சோளம் அறுவடை- சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-18 17:42 GMT

மக்காச்சோளம் அறுவடை பணிகள்

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளங்களை ஏராளமான விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். அதிலும் தற்போது ஒரு சில இடங்களில் விவசாயிகள் சோளம் அறுவடை பணிகளும் மேலும் ஒரு சில இடங்களில் சோளம் சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் உற்பத்தி ஆகும் மக்காச்சோளம் கோழி மற்றும் கால்நடை தீவனத்திற்காக நாமக்கல் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நூறு கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்று ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து நூறு வரை விலை நிர்ணயம் செய்து வாங்கி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

கடந்த ஆண்டுகளில் வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சோளப்பயிர்கள் சேதமடைந்ததை தொடர்ந்து சோளம் மூட்டை ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை ஆன நிலையில், தற்போதைய நடப்பாண்டில் மூட்டை ஒன்றுக்கு ரூ.1,000 வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.

மேலும் சோளம் சாகுபடி சமயங்களில் பருவம் தவறி பெய்த மழையால் தற்போது சோளம் உற்பத்தி குறைந்துள்ளது. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நான்கு ஏக்கரில் சோளம் பயிரிட்டு தற்போது அவற்றை அறுவடை செய்துள்ளதாகவும் சுமார் 90 மூட்டை வரை உற்பத்தி ஆக வேண்டிய இடத்தில் தற்போது சுமார் 40 முதல் 50 மூட்டைகள் மட்டுமே சோளம் உற்பத்தி ஆகி இருப்பதாக கவலையுடன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்