பராமரிப்பு பணி: கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது

Update: 2023-02-04 20:43 GMT


மதுரை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கீழ்க்கண்ட சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில ரெயில்கள் பகுதியாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

விழுப்புரத்தில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16867), கோவையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (16721), மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் மதுரை-ராமேஸ்வரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06655) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06664), விருதுநகர்-மதுரை இடையேயும், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து இன்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்டிரல்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (16343) கூடல்நகர்-மதுரை இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், குருவாயூரில் இன்று இரவு 11.15 மணிக்கு புறப்படும், குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். இதனால் மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்கள் தவிர்க்கப்பட்டு, இதற்கு மாற்றாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்