கையில் தீப்பந்தம் ஏந்தி மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கையில் தீப்பந்தம் ஏந்தி மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு கையில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இவர்கள் அரியலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.