மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
சென்னை,
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள் காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.