மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை
மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜோலார்பேட்டையை அடுத்த யுனிவர்சல் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் நாட்டறம்பள்ளி தாலுகா, ஜங்களாபுரம் கூட்ரோட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் யாசினி, பிரசன்னா, மோனிஷ் மற்றும் அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். மேலும் தடகளப்போட்டியில் தனிஷ்கா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் தங்கவேல், முதல்வர் செண்பகாதேவி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.