மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு-குண்டம் திருவிழா

மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு-குண்டம் திருவிழா

Update: 2023-05-28 12:06 GMT

வீ.மேட்டுப்பாளையம்

வெள்ளகோவிலில் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு குண்டம் திருவிழா வருகிற ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 16-ந்தேதி கணபதி பூஜையும், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், கடந்த 23-ந்தேதி கோவிலில் கம்பம் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு குறிஞ்சி கண்திறத்தல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு படிசாதம் படைத்தலும், இரவு 10 மணிக்கு அக்கினி குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். 31-ந்தேதி காலை 4 மணிக்கு பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வந்து 11 மணிக்கு தீர்த்த அபிஷேகமும் பகல் 12 மணிக்கு பொங்கல் படைத்தும் மகா பூஜையும் நடைபெறும். மாலை 4 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்துமாவிளக்கு பூஜை நடைபெறும். வருகிற 1-ந்தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் தெப்பக்குளத்தில் இருந்து கோவிலுக்கு அக்னி சட்டி எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும்,மாலை 5 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், மகா தீபாராதனை பக்தர்களுக்கு காட்டப்படும். இரவு கம்பம் கங்கை செல்லும் நிகழ்ச்சியும், 2-ந்தேதி மறு அபிஷேகமும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும். மாலை அம்மன் பூ பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்