கோவை, கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்றுவரும் மகா சிவராத்திரி விழாவில் அரசியல் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். ஈஷா மையத்தில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். முன்னதாக ஈஷாவுக்கு வந்தவுடன் தீர்த்த குளத்தை பார்வையிட்ட திரவுபதி முர்மு, அங்கு கால் நனைத்து, தியான பீடத்தில் வழிபட்டார். நாளை உதகை வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களிடையே உரையாற்றுகிறார்.இதனிடையே கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது ஆதியோகி சிலை முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மகா சிவராத்திரிமாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்! சிவராத்திரியையொட்டி இன்று நாள் முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர். மகாசிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு இன்று பகல் மற்றும் இரவு முழுவதும் சிவன் கோவில்களில் நடை திறந்திருக்கும். இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இன்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்துள்ளதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.மகா சிவராத்திரி - நடராஜர் கோவிலில் கோலாகலம்திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்தஞ்சை பிரகதீஷ்வரர் கோயிலில் களைகட்டிய மகா சிவராத்திரி உற்சவம் சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும். சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம். எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர்கள் நன்மை பெறுவார்கள்.