மகா சிவராத்திரி விழா
சிவகிரி அருகே விஸ்வநாதபேரி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது. மகா சிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை அம்மன் சன்னதியில் மண் குடத்தில் அலகு நிறுத்தும் காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்குதல் காட்சியும், அம்மன் வீதி உலா வந்து மஞ்சள் நீராடி முளைப்பாரி கரைத்து சன்னதி வந்து சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் தேனி, போடிநாயக்கனூர், பாண்டிச்சேரி ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.