மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

Update: 2023-08-02 19:30 GMT

பாலக்கோடு:-

பாலக்கோடு முத்துகவுண்டர் தெருவில் மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு கொலு வைத்தல், கங்கா பூஜை, கோபூஜை, நவக்கிர சாந்தி ஹோமம், பஞ்சசுத்தி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று முன்தினம் பனங்காடு ஊர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர் அம்மா அனுப்புதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளன்று மகா முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்