கோவை பேரூரில் சுற்றித் திரிந்த மக்னா காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது..!

கோவை பேரூரில் சுற்றித் திரிந்த மக்னா காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

Update: 2023-02-23 13:19 GMT

கோவை,

தருமபுரியில் பிடிபட்ட மக்னா காட்டுயானை என்பது டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், அந்த காட்டுயானை டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுக்கரை வந்தது. அங்கிருந்து நொய்யல் ஆற்றுப்படுகை பேரூர் அருகே வந்தது. இந்த யானையை தொடர்ந்து அதன் போக்கிலேயே கண்காணித்த வனக்குழு பின்னர் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதியில் விட திட்டமிட்டிருந்தனர்.

நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்த யானையை காலை முதல் வனத்துறையை சார்ந்த 8 குழுக்கள் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தனர். இதனை தொடர்ந்து 4 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர் கும்கி யானையின் உதவி தேவைப்படும் என்பதால் சின்னத்தம்பி யானையும் வரவழைக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்னா யானை நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்து அதற்கு மேல் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. அங்கு இருந்த வனத்துறையினர் மற்றும் 4 மருத்துவர்கள் கொண்ட குழு யானையை சுற்றிவளைத்து மயக்க ஊசி செலுத்தினர். இதனால் யானை மயக்கமடைந்தது. அதன்பின்னர் கும்கியானை உதவியுடன் மக்னா யானையை வாகனத்தில் ஏற்றினர்.

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை சத்தியமங்கலம் அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 4 நாட்களாக சுற்றி திரிந்த யானை பிடிக்கப்பட்டதால் பொதுமக்கள், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்