மதுரை ரெயில் விபத்து: 9 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டன
உயிரிழந்தோரின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை,
மதுரை அருகே நேற்று சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 9 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிரிழந்தோரின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக 9 பேரின் உடல்கள் மதுரையில் இருந்து 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து, விமானம் மூலம் உடல்களை லக்னோ கெண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பியவர்களை விமானத்தில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.