மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் நியமனம்
மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
மதுரை கோட்ட ரெயில்வேயின் முதுநிலை வர்த்தக மேலாளராக இருந்து ரதிப்பிரியா திருச்சி கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளராக தென்னக ரெயில்வேயின் துணைத்தலைமை இயக்க மேலாளராக பணியாற்றி வந்த டி.எல்.கணேஷ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்னர் மதுரை கோட்டத்தில் உதவி இயக்க மேலாளர், கோட்ட இயக்க மேலாளர், கோட்ட வர்த்தக மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவர், மதுரை கோட்ட மேலாளர் அனந்த், கூடுதல் கோட்ட மேலாளர் செல்வம் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். அதேபோல, உதவி வர்த்தக மேலாளர்கள், வர்த்தகப்பிரிவு அலுவலர்கள், முதன்மை டிக்கெட் ஆய்வாளர்கள், முதன்மை வர்த்தக, வர்த்தக ஆய்வாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.