நடுவிற்பட்டி தேவி வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடைவிழா

நடுவிற்பட்டி தேவி வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.

Update: 2022-08-10 14:05 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் நடுவிற்பட்டி நடுத்தெரு தேவி வண்டி மலைச்சி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் முதல் 8-ந் தேதி வரை கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. 8-ந் தேதி மாலை 6 மணிக்கு வண்டி மலைச்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜையும், முளைப்பாரி அம்மன் கண்திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம் படையல் மற்றும் வண்டி மலைச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலையில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். நேர்த்திக்கடன் செலுத்தினர் நேற்று மாலை முளைப்பாரி அம்மன் தெப்பத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று எட்டயபுரம் நடுவிற் பட்டி தெப்பத்தில் முளைப்பாரி அம்மன் காட்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகளை செங்குந்தர் சமுதாயத்தினர், இளைஞரணியினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்