மாணவர்கள் தமிழை சுவைத்து பருகினால் அது உங்களை வாழ வைக்கும்- பாடலாசிரியர் அறிவுமதி

மாணவர்கள் தமிழை சுவைத்து பருகினால் அது உங்களை வாழ வைக்கும் என்று திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி கூறினார்.

Update: 2022-12-14 20:05 GMT

மாணவர்கள் தமிழை சுவைத்து பருகினால் அது உங்களை வாழ வைக்கும் என்று திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி கூறினார்.

கருத்தரங்கம்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறையின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். ஆந்திர மாநில திராவிட பல்கலைக்கழக தமிழ்மொழி மற்றும் மொழி பெயர்ப்பியல் துறை பேராசிரியர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இலக்கியத்துறை பேராசிரியர் இளையாபிள்ளை வரவேற்றார்.

விழாவில் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி கலந்து கொண்டு பேசியதாவது:-

தனது திரைத்துறை பாடல்வரிகளுக்கு வழிகோலியது சங்க இலக்கியங்களே. நான் மட்டுமல்ல, முண்டாசு கவி பாரதியும், காக்கை குருவி எங்கள் சாதி என்று பாட வழிவகுத்தது சங்க இலக்கியங்கள் எனில் மிகையாகாது. பிற உயிர்களையும், தம்முயிர் போல் எண்ணத்தூண்டுவது தமிழ் இலக்கியங்களே.

வாழ வைக்கும்

சங்க இலக்கியங்களான நற்றிணையும், குறுந்தொகையும் சொல்லாத செய்திகள் இல்லை. தமிழ் படிக்கும் மாணவர்கள் இலக்கியங்களை சுவைத்து பருகுங்கள். தமிழ் உங்களை வாழ வைக்கும். தமிழை வாசிக்காமல் சுவாசிக்க கற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளியின் துறைத்தலைவர் கவிதா கலந்து கொண்டு பேசினார். இலக்கியத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் செந்தில்முருகன், முதுகலை மாணவர் வாசுதேவன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் தமிழ் பண்பாட்டு மைய இயக்குனர் திலகவதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்