12 இடங்களில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

உலக பட்டினி தினத்தையொட்டி 12 இடங்களில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

Update: 2023-05-28 18:45 GMT


உலக பட்டினி தினத்தையொட்டி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருநாள் மதிய உணவு வழங்கப்படும் என்று அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர், சிக்கல், கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட 12 இடங்களில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மதிய உணவாக வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை வாங்கி சென்றனர். இதில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞர் அணி, மீனவர் அணி பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்