சந்திர கிரகணம்:பொள்ளாச்சி, ஆனைமலையில் கோவில்களில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி பொள்ளாச்சி, ஆனைமலையில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.

Update: 2022-11-08 18:45 GMT

கிணத்துக்கடவு

சந்திர கிரகணத்தையொட்டி பொள்ளாச்சி, ஆனைமலையில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.

சந்திர கிரகணம்

கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை நடை திறக்கப்பட்டு காலையில் முதற்கால பூஜையும், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜைநடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர் மாலை ஏற்பட்ட சந்திர கிரகணத்தை முன்னிட்டு 1 மணி அளவில் சூலக்கல் கோவிலின் முன்பக்க நடைவாசல் கேட ்மூடப்பட்டது. ஆனாலும் சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசனம் செய்து சென்றனர். இன்று (புதன்கிழமை) காலை வழக்கம் போல் கோவில் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேபோல் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சாமி கோவில் வேலாயுத சாமிக்கு காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. கிணத்துக்கடவில் உள்ள சிவலோகநாதர் உடனமர் சிவலோக நாயகி கோவிலில் மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கோவில் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு சிவலோகநாதர் உடனமர் சிவலோக நாயகி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் கிணத்துக்கடவு கரிய காளியம்மன் கோவிலிலும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது.

மாசாணி அம்மன் கோவில்

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு பிற்பகல் 2 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இன்று வழக்கம்போல் காலை 6 மணி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேபோல் பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோவில், மாரியம்மன் கோவில், காிவரதராஜ பெருமாள் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சந்திர கிரகணத்தையொட்டி நடை அடைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்