கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி முதலிடம்

குறுமைய அளவில் நடந்த கைப்பந்து இறுதி போட்டியில், 3 பிரிவுகளில் கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

Update: 2022-09-16 15:20 GMT

கோத்தகிரி, 

குறுமைய அளவில் நடந்த கைப்பந்து இறுதி போட்டியில், 3 பிரிவுகளில் கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

இறுதி போட்டி

குன்னூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மிளிதேன் அரசு பள்ளி சார்பில், கோத்தகிரியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து இறுதி போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு கைப்பந்து இறுதி போட்டியில் கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி அணியும், கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி அணியும் விளையாடியது.

3 செட்கள் கொண்ட போட்டியில் 2 செட்களை கைப்பற்றி, கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி வெற்றி ெபற்று முதலிடம் பிடித்தது. தொடர்ந்து 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு கைப்பந்து இறுதி போட்டியில் கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணியும், எச்.ஆர்.எம். மெட்ரிக் பள்ளி அணியும் மோதியது. இதில் கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி நேர் செட்களில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றது

14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவு கைப்பந்து இறுதி போட்டியில் சோலூர்மட்டம் அரசு பள்ளி அணியும், கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணியும் விளையாடியது. இந்த போட்டியிலும் கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. இதன் மூலம் மாணவர்களுக்கான 3 பிரிவு கைப்பந்து இறுதி போட்டிகளிலும் கீழ் கோத்தகிரி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மேலும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான கைப்பந்து இறுதி போட்டியில் கோத்தகிரி கேர்கம்பை ஹில்போர்ட் பள்ளி அணியும், குன்னூர் சாந்தி விஜயா பள்ளி அணியும் பங்கேற்று விளையாடின. இதில் கேர்கம்பை ஹில்போர்ட் பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்ததுடன், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்