அருள்புரம்
திருப்பூர் அருகே நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளான ஏ.பி.நகர். அய்யம்பாளையம், காளிநாதம்பாளையம், குன்னாங்கல்பாளையம், நொச்சிப்பாளையம் ஆகிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. வேகத்தடைக்கு 2 முறை வர்ணம் பூசப்பட்டது. அந்த வர்ணம் தரமற்றதாக இருப்பதால் 2 முறை பூசியும் அழிந்துவிட்டன. இதனால் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் வேகத்தடை இருப்பதற்கான எச்சரிக்கை போர்டும் வைக்கவில்லை. எனவே தரமான வர்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.