காதல் மனைவியை 27 முறை கத்தியால் குத்திக்கொன்றேன்

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவியை 27 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

Update: 2023-04-20 18:45 GMT

சூலூர்

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவியை 27 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

டிரைவர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). டிரைவர். இவருடைய மனைவி நிவேதா (25). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர்.

இவர் களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் தற்போது சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிவேதா, இன்னொரு வாலிபருடன் கள்ளக்காத லில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த கணேசன், நிவேதா வை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர் அவர், சூலூர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். கைதான கணேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

காதல் திருமணம்

நான் அந்தமான் நிக்கோபார் தீவில் பிறந்தேன். பெற்றோரை இழந்த என்னை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசமலையை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் தத்தெடுத்து வளர்த்தார்.

நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கோவை -அன்னூரில் தனியார் மில்லில் வேலை பார்த்தேன்.

அப்போது அங்கு பணியாற்றிய திருச்சி மாவட்டம் மணச்ச நல்லூரை சேர்ந்த நிவேதா என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

அதைத்தொடர்ந்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

கள்ளக்காதல்

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சூலூரை அடுத்த பள்ள பாளையம் பகுதிக்கு வந்தோம். அங்கு நான் கட்டிட வேலை மற்றும் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தேன்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள மில்லுக்கு நிவேதா வேலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதை அறிந்து நான் நிவேதாவிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினேன்.

அதன்பிறகும் நிவேதா செல்போன் மூலம் கள்ளக்காதலனுடன் பேசி வந்தார்.

கத்திக்குத்து

நான் நேற்று (நேற்றுமுன்தினம்) மதியம் 12 மணியளவில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். அங்கிருந்த எனது மாமியாரி டம் குழந்தைகளுக்கு பழச்சாறு வாங்கி கொடுக்குமாறு கூறி வெளியே அனுப்பினேன்.


அவர், பிள்ளைகளை அழைத்து சென்ற தும் நான் மனைவியிடம் கள்ளக்காதல் விவகாரம் குறித்து பேசினேன்.

இதனால் எங்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் நிவேதாவின் கழுத்தில் 5 இடங்களில் குத்தினேன்.

அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் நிவேதாவின் மார்பு, வயிறு, தொடை, கால் என 27 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினேன். இதில் நிவேதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்தனர்

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான கணேசனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்