லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர் அருகே லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மதுரை அருகே உள்ள டி. கல்லுப்பட்டியை சேர்ந்த செல்லையா (வயது 68) என்றும், அவர் லாட்டரி சீட்டுகளை விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 240 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.