லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மயிலாடுதுறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-04-30 18:45 GMT

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள பீடா ஸ்டால் ஒன்றில்அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பீடா ஸ்டாலில் வைத்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மயிலாடுதுறை கூறைநாடு வாத்துக்காரத்தெருவைச் சேர்ந்த ராமதாஸ் மகன் கார்த்திகேயன் (வயது 34) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த கேரள மாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் கார்த்திகேயனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்