லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-11 18:30 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக பல்வேறு புகார் வந்தன. இதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணன் தோப்பு தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 49) என்பவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 36 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,060 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்