லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருத்துறைப்பூண்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கோட்டூர்:
திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது காய்கறி மார்க்கெட் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், நன்னிலம் குவளைக்கால் பகுதியைச் சேர்ந்தபழனிவேல் (வயது42) என்பதும், இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டைகள் விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,650 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.