லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

போடி பஸ்நிலையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-06 19:45 GMT

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது போடி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவரிடம், தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 8 விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், ேபாடி அம்மாகுளம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (வயது 54) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்