விழுப்புரம் அருகே சோழகனூரை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருக்கு சொந்தமான லாரியை நேற்று விழுப்புரம் காட்பாடி ரெயில்வே கேட் பகுதியில் நிறுத்தியிருந்தார்.
வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மர்ம மனிதர்கள் லாரியை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பாக்கியராஜ் விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.