சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி திருட்டு

Update: 2022-10-06 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது லாரிக்கு ஆயுத பூஜையை ஒட்டி பூஜை போட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து பென்னாகரம் மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் லாரியை நிறுத்தி விட்டு சென்றார். இந்தநிலையில் மீண்டும் சென்று பார்த்த போது, லாரி திருடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் லாரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்