பர்கூர்
பர்கூர் ஜெகதேவி சாலை வெங்கடாபுரம் கூட்டு ரோடு பகுதியில் விழுப்புரம் பறக்கும் படை பிரிவு கனிம வளத்துறை துணை இயக்குனர் செல்வசேகர் தலைமையில் அதிகாரிகள் ரோந்து சென்றரர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற ஒரு லாரியை அவர்கள் சோதனை செய்தனர். அதில் ஜெகதேவியில் இருந்து பர்கூருக்கு மணல் கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக அதிகாரி செல்வசேகர் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். டிரைவர் மற்றும் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.