லாரி மோதி தொழிலாளி சாவு

பட்டுக்கோட்டை அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

Update: 2022-12-19 20:04 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

தொழிலாளி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவருடைய மகன் செல்லத்துரை(வயது37). தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆலடிக்குமுளை கடைத்தெரு பகுதியில் செல்லத்துரை நடந்து வந்து கொண்டிருந்தபோது திருவோணத்தில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி வந்த லாரி செல்லத்துரை மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவருடைய தாய் சரோஜா பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்