லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

Update: 2022-06-03 10:54 GMT

குண்டடம்

தாராபுரத்தை அடுத்துள்ள நஞ்சியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 45) தொழிலாளி. இவர் குண்டடம் பிரதான சாலையில் சங்கப்பாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாராபுரம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும்-மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரவிக்குமாரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்