பூப்பல்லக்கில் முருகப்பெருமான் வீதிஉலா

வாடிப்பட்டியில் வைகாசி விசாக திருவிழாவில் பூப்பல்லக்கில் முருகப்பெருமான் வீதிஉலா வந்தார்.

Update: 2023-06-05 20:04 GMT

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை தர்மராஜன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

திருவிழாவைெயாட்டி பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு வல்லபகணபதி கோவிலில் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வாடிப்பட்டி நகர் முழுவதும் முக்கியவீதிகளில் பல திருக்கண்களை அடைந்து தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டைபுதுார், போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ரெயில்நிலையம், சொக்கையாசுவாமிகள் மடம் வழியாக மறுநாள் மதியம் 12 மணிக்கு கோவிலை வந்து அடைந்தது. விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்