பெரியகுளத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

பெரியகுளத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2023-05-02 21:00 GMT

பெரியகுளம் தென்கரையில் பிரசித்திபெற்ற காளஹஸ்தீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மணக்கோலத்தில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளினர். பின்னர் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் வடகரையில் உள்ள வைத்தீஸ்வரர்-தையல்நாயகி அம்மன் கோவிலில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி சுந்தரேசுவரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்