வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பொருட்கள் வைத்திருந்த கதவின் பூட்டு உடைப்பு

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பொருட்கள் வைத்திருந்த அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வேறு பூட்டு போடப்பட்டிருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-21 17:55 GMT

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பொருட்கள் வைத்திருந்த அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வேறு பூட்டு போடப்பட்டிருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

விளையாட்டு பொருட்கள்

வேலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் காட்பாடியில் புதிதாக தொடங்கப்பட்ட விளையாட்டு அரங்கத்தில் இயங்கி வருகிறது.

விளையாட்டு நல அலுவலராக (பொறுப்பு) நோயலின் ஜான் பணியாற்றி வருகிறார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலகம் கடந்தாண்டு வரை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள அறையில் இயங்கி வந்தது.

தற்போது அந்த அறையில் விளையாட்டு பொருட்கள் மற்றும் பழைய ஆவணங்கள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் தற்போது முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு நேற்று உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற இருந்தது. இதற்கான பொருட்கள் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்தது.

அறைக்கதவின் பூட்டு உடைப்பு

அதனை எடுப்பதற்காக விளையாட்டு நலஅலுவலர் நோயலின் ஜான் அங்கு சென்றார். அறையின் கதவில் அவர் போட்டிருந்த பூட்டுக்கு பதிலாக வேறு பூட்டு தொங்கி கொண்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அங்கிருந்த காவலர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் சரியான பதில் தெரிவிக்கவில்லை. முதல்-அமைச்சர் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதால் இதுகுறித்து நோயலின்ஜான் கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு தகவல் தெரிவித்தார்.

சிறிதுநேரத்துக்கு பின்னர் பொருட்களை எடுப்பதற்காக பூட்டை உடைக்க முயன்றார். அப்போது காவலர் ஒருவர் பூட்டிற்கான சாவியை அவரிடம் கொடுத்தார். இதையடுத்து நோயலின்ஜான் அறைக்கதவை திறந்து விளையாட்டு பொருட்களை எடுத்து சென்றார். அறைக்கதவின் பூட்டு சாவி என்னிடம் உள்ளது. பூட்டை உடைத்து வேறு பூட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்