திருவாரூர் மாவட்டத்துக்கு, 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை
முத்துப்பேட்டை தர்கா கந்தூரி திருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர்;
முத்துப்பேட்டை தர்கா கந்தூரி திருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கந்தூரி விழா
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா வருகிற 25-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி முடிய 14 நாட்கள் நடைபெற உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா அடுத்த மாதம் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு நடைபெற இருக்கிறது. இந்த சந்தனக்கூடு விழாவையொட்டி 5-ந் தேதி (திங்கட்கிழமை) திருவாரூா் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
10-ந் தேதி பணி நாள்
இதற்கு பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 10-ந் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையான 5-ந் தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.