உள்ளாட்சி இடைத்தேர்தல்: 9 பதவிகளுக்கு 28 பேர் மனு தாக்கல்

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

Update: 2022-06-27 16:43 GMT

தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 9 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான இன்று மொத்தம் 19 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் 9 பதவிகளுக்கு மொத்தம் 28 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 5 பேர், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 13 பேர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், வடபுதுப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், மொட்டனூத்து ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர், ரெங்கசமுத்திரம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர், முத்தாலம்பாறை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், தும்மக்குண்டு ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்த 5 பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்